குடிபோதையில் செல்போன் டவர் மீது ஏறி நின்று ரகளை செய்த நபர்

18 November 2020, 8:57 pm
Quick Share

விருதுநகர்: ராஜபாளையம் அருகே குடிபோதையில் செல்போன் டவர் மீது ஏறி நின்று ரகளையில் ஈடுப்பட்ட நபரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் அரசரடி பகுதியில் செல்போன் டவர் மீது ஏறி நின்று வாலிபர் ஒருவர் கீழே விழுந்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இது சம்பந்தமாக தளவாய்புரம் போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில்,

அவர் மாங்குடி பகுதியைச் சேர்ந்த ராஜதுரை என்பதும், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை பத்திரமாக போலீசார் கீழே இறக்கி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.