பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவோம்: பாஜக பிரமுகர்கள் காவல்துறையினரிடம் உறுதி

15 August 2020, 9:28 pm
Quick Share

விருதுநகர்: இராஜபாளையத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் பொதுமக்கள் மற்றும் பாரதி ஜனதா கட்சி முக்கிய பிரமுகர்களுடன் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை நடத்தினர்.

இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி தினத்தினை முன்னிட்டு காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாக சங்கர் தலைமையில் பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உடன் விநாயகர் சதுர்த்தி விழாவினை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து தனியார் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இராஜபாளையம் அனைத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழக அரசு நோய்தொற்று பரவலை தடுக்கும் வண்ணம் பொதுமக்கள் நலன் கருதியும், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அரசு வெளியிட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்றுமாறும், சிறிய கோவில்களில் விநாயகர் சிலைகள் போன்றவை வைக்கும் போது பாதுகாப்பு ஏற்பாடு குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அரசின் கோரிக்கையை ஏற்று பாதுகாப்புடன் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடுவோம் காவல்துறையினரிடம் உறுதியாக கூறினர்.

Views: - 25

0

0