ரஜினி அரசியலுக்கு வராமல் ஆன்மீகத்தில் ஈடுபட்டால் இன்னும் 16 ஆண்டுகள் வாழலாம்; நாகர்கோவிலில் பிரபல ஜோதிடர் கணிப்பு;

9 November 2020, 7:57 pm
Quick Share

கன்னியாகுமரி: ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடாமல் ஆன்மீகத்தில் ஈடுபட்டால் இன்னும் 16 ஆண்டுகள் வாழலாம். இல்லை என்றால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என பிரபல ஜோதிடர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது; நான் கடந்த 22 ஆண்டுகளாக ஜாதக துறையில் உள்ளேன். 2011ம் ஆண்டு மறைந்த ஜெயலலிதாவின் இறப்பை மிகத் துல்லியமாக கணித்து அவரது இறப்பு குறித்து தெரிவித்தேன். அதைபோல் நடந்தது. இதேபோல் கருணாநிதியின் மரணத்தையும் 97 முதல் 99 வயதுக்குள் இறப்பார் என்று தெரிவித்தேன். அதேபோல் அவர் 99 வயதில் இறந்தார். தற்போது நடிகர் ரஜினிகாந்தின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்துள்ளேன். அதன்படி வரும் டிசம்பரில் இருந்து 3 வருடம் மிகவும் கெட்டகாலம். எந்த சூழ்நிலையிலும் அவர் அரசியலில் ஈடுபடக்கூடாது. வீட்டிலிருந்தபடி ஓய்வு எடுத்து ஆன்மிகத்தில் ஈடுபட்டால் இந்த கண்டத்தை தாண்டலாம். அரசியலுக்கு வந்தால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் 

 அதுமட்டுமில்லாமல் மிகப்பெரிய எதிரி கூட்டம் இவருக்கு உருவாகும். அவர் ஓய்வு எடுத்து ஆன்மிகத்தில் ஈடுபட்டால் இந்த பூமியில் இன்னும் 16 ஆண்டு காலம் அவர் வாழலாம். அரசியலில் ஈடுபட்டால் மிகப் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். ரஜினியின் ரசி மகர ராசி சிம்ம லக்னம் டிசம்பரில் சனி பெயர்ச்சி வருகிறது.
இதனால் இவரது உடல் உபாதைகள் அதிகரிக்கும். கட்சி ஆரம்பித்து வீதி வீதியாக சென்றால் உடல் நிலை மிகப் பெரிய கேள்விக் குறியாகிவிடும். 2010ல் இதுபோல் ஒரு நிலை அவருக்கு ஏற்பட்டு உலகமே அவருக்காக பிரார்த்தித்து. அதேபோல் 2020 மீண்டும் அவருக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

 2021 தேர்தலில் கருணாநிதியின் மகன் மு க ஸ்டாலின் 185 தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார். அதற்கிடையில் குடும்பத்திற்குள் ஒரு சிறிய பிரச்சினை வரும். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சசிகலா மிகப்பெரிய சுனாமியாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது. அதிமுக ஒரு குழப்பமான சூழ்நிலையில் போய்க்கொண்டு இருக்கும். ஒரு கட்டத்தில் சசிகலாவிடம் எல்லாரும் போய் சேரும் சூழ்நிலை உருவாகும். இதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. சசிகலா ஜாதகப்படி டிசம்பரில் இருந்து மூன்று கிரகங்கள் நல்ல இடத்திற்கு வருகிறது. இதனால் கருணாநிதி ஜெயலலிதா எப்படி இருந்தார்களோ அதே போல் சசிகலாவும் வர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

Views: - 18

0

0