வலைதளங்களில் வைரலாகும் ரஜினி மக்கள் மன்றத்தின் பதிவுகள்

By: Udayaraman
5 January 2021, 6:38 pm
Quick Share

புதுக்கோட்டை: நடிகர் ரஜினிகாந்தின் ரஜினி மக்கள் மன்றத்தின் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது,

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த பின்னர் ரஜினி மக்கள் மன்றத்தினர் மற்றும் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உறுப்பினர் சேர்க்கை மட்டுமல்லாது பூத் கமிட்டி
வரை அனைத்தையும் தயார் செய்து வந்த நிலையில், திடீரென்று நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி தான் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார். இது அவரது ரசிகர்கள் மற்றும் மன்றத்தினர் மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் பல்வேறு கருத்துக்களை சமூக வலை தளங்களில் பரப்பி வருகின்றனர்.

குறிப்பாக மகாபாரதத்தில் வரும் வசனம் போன்று மகாபாரதத்தில் கிருஷ்ணன் சூரியனை மறைத்து அஸ்தமித்து விட்டதாக நம்ப வைத்து எதிரிகளை வெளியே வரச் செய்து புதிய வியூகம் தான் இப்போது நடக்கிறது என்றும்,
உங்களது காவலருக்கு புத்தாண்டும் இல்லை உங்களுக்கும் இல்லை வலியுடன் நீங்களும் நாங்களும் மக்களும் என்ற வாசகங்களையும், அரசியல் ரஜினி ரசிகன் என்ற வாசகங்கள் மட்டுமல்லாமல் ரஜினி படத்தை வைத்து ஐயப்பன் பாடல் மிக்ஸ் செய்தும், பல்வேறு கருத்துக்களை சமூக வலை தளங்களில் பரப்பி வருகின்றனர் இது தற்போது வைரலாகி வருகிறது. குறிப்பாக மகாபாரத வசனம் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.

Views: - 39

0

0