ரஜினி 2021 சட்டமன்ற தேர்தல் போரில் நிச்சயம் பங்கேற்பார்: அர்ஜுன் சம்பத் பேட்டி

7 November 2020, 11:34 pm
Quick Share

திருவள்ளூர்: ரஜினி 2021 சட்டமன்ற தேர்தல் போரில் நிச்சயம் பங்கேற்பார் என்றும், பாஜகவின் வேல் யாத்திரை தடை செய்தது கண்டனத்துக்குரியது, தடைகளை உடைத்து ஆன்மீக எழுச்சி தமிழகத்தில் நிலவி வருவதாக இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணி திருக்கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் 26 அடி உயரமுள்ள வேலுக்கு யாகம் நடத்தப்பட்டு வேல் பூஜை செய்து யாக கலசநீர்  தெளித்து பாலபிஷேகம் நடத்தினர்.  இதில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு வேல் வழிபாடு செய்தார். பின்னர் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய தரிசனம் செய்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

லஞ்ச ஊழலற்ற ஆன்மீக அரசியல் வென்றிட வேல் வழிபாடு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருவதாகவும், பாஜக தலைவர் முருகனின் வேல் யாத்திரை தடைசெய்யப்பட்டது கண்டனத்துக்கு உரியது என்றும், தடையை வேல் படை உடைத்து ஆன்மிக எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், வரும் 2021 ஆம் தேர்தல் போரில் ரஜினி நிச்சயம் வருவார், சிறையில் உள்ள ஏழு தமிழர்கள் விடுதலை மற்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கும் திமுக கூட்டணி கட்சியினர் செய்த துரோகம் என்றும் அவர் தெரிவித்தார்.

Views: - 16

0

0