ரஜினி உடல்நலம் பெற அவரது ரசிகர்கள் பறவைக்காவடியோடு வாழிபாடு

12 January 2021, 5:06 pm
Quick Share

மதுரை: நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல்நலம் பெற அவரது ரசிகர்கள் அக்கினிச் சட்டி எடுத்து பறவைக்காவடியோடு திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து டிசம்பர் 31ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்தால் நிலையில்,அதை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக பட்டாசு வெடித்துக் கொண்டாடி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இனிமேல் நான் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று ஒரு அதிர்ச்சியான தகவலை ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்.

இனி தொடர்ந்து சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் வீடுகளுக்கு முன்பாக ரஜினி மக்கள் மன்றத்தினர் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் இனிமேல் அரசியலுக்கு வருவது சாத்தியமே இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட துணை செயலாளர் அழகர்சாமி தலைமையில் திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் கோல்டன் சரவணன் என்பவர் 21 அக்கினி சட்டி ஏந்தியும்,

ஜெயமணி என்பவர் கிரேன் இயந்திரம் மூலம் பறவை காவடி எடுத்தும், நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டும் என வீதியுலா வந்தனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் அல்லது வராமல் போகிறார் எங்களுக்கு ரஜினிகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டியே இந்த வேண்டுதலை செய்து வருகிறோம் என ரஜினி மக்கள் மன்றத்தினர் தெரிவித்தனர்.இந்த நிகழ்வில் ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் பால தம்புராஜ்,அழகர்சாமி கோல்டன் சரவணன்,அவனி பாலா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 6

0

0