அதிமுக தோல்விக்கு ரங்கசாமி தான் காரணம்: முதலமைச்சர் மீது வையாபுரிமணிகண்டன் குற்றச்சாட்டு

Author: Udhayakumar Raman
26 September 2021, 5:27 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் ரங்கசாமி தான் காரணம் என அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரிமணிகண்டன் குற்றச்சாட்டியுள்ளார்

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து முத்தியால்பேட்டை அதிமுக நிர்வாகிள் ஆலோசனை கூட்டம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரிமணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய வையாபுரிமணிகண்டன், கடந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களின் வேட்பாளர்களின் தோல்விக்கு முதல்வர் ரங்கசாமியை காரணம் என்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதாக கூறி கடைசி நேரத்தில் அவர் பிராச்சாரத்திற்கு வரவில்லை என்றும், கூட்டணி கட்சியினர் போட்டியிட்ட தொகுதிகளில் அவரது கட்சியை சேர்ந்தவர்களை சுயேட்சையாக போட்டியிட வைத்ததும் தோல்விக்கு காரணமாக அமைத்ததாகவும், முதல்வர் ரங்கசாமி நம்ப வைத்து முதுகில் குத்திவிட்டதாகவும் குற்றச்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி தர்மத்தை ரங்கசாமி மீறினால் புதுச்சேரி அதிமுக தனித்து போட்டியிட கட்சி மேலிடத்தை வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

Views: - 192

0

0