காமராஜர் மணிமண்டபம் திறக்க நடவடிக்கை: முதலமைச்சர் ரங்கசாமி தகவல்

8 July 2021, 7:57 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.23 கோடி மதிப்பில் கட்டுப்பாட்டு வரும் காமராஜர் மணிமண்டபத்தை அவரது பிறந்தநாள் அன்று திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 2007 ஆம், ரூ.23 கோடியில் காமராஜர் மணி மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மணிமண்டபத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைய உள்ள நிலையில் பணிகளை முதலமைச்சர் ரங்கசாமி இன்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி,

காமராஜரின் எண்ணம் போன்று மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் மணிமண்டபம் அமையும் என்றும், அரசு சார்பில் மாணவர் சேர்க்கைக்கான செண்டாக் அலுவலகம், நூலகம், காமராஜரின் வாழ்க்கை வரலாறின் அருங்காட்சியகம் ஆகியவைகள் அமைய உள்ளதாகவும், மேலும் காமராஜரின் பிறந்தநாள் அன்று மணிமண்டபம் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Views: - 331

0

0