சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை

Author: kavin kumar
13 August 2021, 2:31 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ வழக்கில் வாலிபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருவாரூர் அருகே உள்ள காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் ரவிச்சந்திரன். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி 17 வயது இதே பகுதியை சேர்ந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இரவிச்சந்திரன் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையை திருவாரூர் மகிளா கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், திருவாரூர் மகிளா கோர்ட்டில் நீதிபதி சுந்தரராஜன் ரவிச்சந்திரனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதனை அடுத்து ரவிச்சந்திரன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 217

0

0