பாபநாசத்தில் பிடிபட்ட அரிய வகை வெளவால்: வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

Author: Udhayakumar Raman
8 August 2021, 7:57 pm
Quick Share

தஞ்சாவூர்: பாபநாசத்தில் பிடிப்பட்ட அரிய வகை மஞ்சள் நிற வெளவால் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா ராஜகிரி மாந்தோப்பு சின்னற்றங்கரை தெருவில் வசித்து வருபவர் சண்முகவேல் (வயது 33) இவரது வீட்டின் அறைக்குள் வெளியிலிருந்து பறந்து வந்த அரிய வகை மஞ்சள் நிற வெளவால் கண்டறியப்பட்டது.அந்துப்பூச்சி போன்ற ஒரு பெரிய அளவிலான பூச்சி இருப்பதை கண்ட சண்முகம் அருகில் சென்று பார்த்த போது அது மஞ்சள் நிறத்தில் உள்ள வெளவால் என்று தெரியவந்தது.அதன் பின் பிடிப்பட்ட அரிய வெளவால் குறித்த தகவல் வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.

Views: - 88

0

0