வாழைக்குலை ஏற்றி வந்த மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தல்

2 November 2020, 3:54 pm
Quick Share

கன்னியாகுமரி : குழித்துறை அருகே வாழைக் குலை ஏற்றி வந்த மினி லாரியில் கடத்திவரப்பட்ட சுமார் நான்கு டன் ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குமரி மாவட்டம் குழித்துறை அருகே படந்தாலுமூடு பகுதியில் விளவங்கோடு வட்டவழங்கல் அதிகாரி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வாழைக் குலை ஏற்றி வந்த கேரளா பதிவெண் கொண்ட மினி லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயன்றபோது ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். அப்போது அதிகாரிகள் லாரியை துரத்தி களியக்காவிளை அருகே ஒற்றமரம் பகுதியில் வைத்து லாரியை மடக்கி பிடித்தனர். அப்போது லாரி ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார்.

இந்த நிலையில் அதிகாரிகள் லாரியை சோதனை செய்தபோது சுமார் நான்கு டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து அதன் மேல்பகுதியில் வாழைக் குலைகளை அடுக்கி வைத்து கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் லாரி மற்றும் அரிசியை பறிமுதல் செய்து குழித்துறையில் உள்ள விளவங்கோடு வட்டவழங்கல் அலுவலகத்தில் கொண்டுவரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 20

0

0