ரியல் எஸ்டேட் அதிபர் அடித்துக்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனை முன்பு திடீர் மறியல் போராட்டம்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Author: Udhayakumar Raman
29 November 2021, 6:59 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே அடித்துக்கொலை செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனை முன்பு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அடுத்துள்ள மல்லியம்பத்து கிராமத்தை சேர்ந்த சிவகுமார்(50) மல்லியம்பத்து பகுதியில் உள்ள மயானம் இடஆக்கிரமிப்பு அகற்றியது தொடர்பாக மல்லியம்பத்து திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல், வாசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் ரவிமுருகையா, அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் தீபக் ஆகியோருடன் ஏற்பட்ட தகராறில் நேற்று அவர் வீட்டு அருகே மனைவி கண் முன்பு கட்டையால் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து திருச்சி சோமரசன்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவரைத் தாக்கிய அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன்(34), தீபக்(28) ஆகிய இருவரை கைது செய்தனர்.

மேலும் இந்த கொலை வழக்கில் திமுக ஒன்றிய செயலாளர் கதிர்வேல், வாசன் எஸ்டேட் உரிமையாளர்
ரவிமுருகையா ஆகியோர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் சிவகுமாரின் உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உடல் பிரேத பரிசோதனை செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க இருந்தனர். அப்போது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையின் முன்பு இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மேற்கு தாசில்தார் ரமேஷ் மற்றும் காவல்துறையினர் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்ட்டு சிறிதுநேரம் பரபரப்பானது.

Views: - 112

0

0