சலபாசனத்தில் தொடர்ந்து 45 நிமிடங்கள் நின்று சாதனை:இந்திய புக் ஆப் ரெக்கார்ட் புத்தகங்களில் இடம் பெற்ற சிறுவன்

Author: Udhayakumar Raman
20 October 2021, 1:31 pm
Quick Share

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் நான்காம் வகுப்பு பள்ளி மாணவன் சலபாசனத்தில் தொடர்ந்து 45 நிமிடங்கள் நின்று இந்திய புக் ஆப் ரெக்கார்ட்’ மற்றும் ‛ஆவ்சம் உலக சாதனை’ புத்தகங்களில் இடம் பெற்றார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த பிரபு கலைச்செல்வி தம்பதியரின் மகன் ஹரிஷ் கண்ணா 9 வயது இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். கும்மிடிப்பூண்டி ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், யோகாசன கலையை பயின்று வரும் ஹரிஷ் கண்ணா தரையில் தலையை வைத்து, தலை மீது கால்களை வைக்கும் சலபாசனத்தில் தொடர்ந்து 45 நிமிடங்கள் நின்று சாதனை படைத்தார். இவரின் சாதனையானது இந்திய புக் ஆப் ரெக்கார்ட்’ மற்றும் ‛ஆவ்சம் உலக சாதனை’ புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது. சாதனை படைத்த 4ஆம் வகுப்பு மாணவனை அப்பகுதிமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Views: - 61

0

0