ரத்த காயங்களுடன் இளம்பெண் சடலம் மீட்பு: காதலருடன் வந்தாரா…?

21 November 2020, 3:04 pm
Quick Share

செங்கல்பட்டு: சதுரங்கப்பட்டினம் காவல் நிலையம் அருகே உடம்பில் பல இடங்களில் ரத்த காயங்களுடன் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சடலம் கண்டெடுக்கப்பட்டு சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் காவல் நிலையம் பின்புறம் புதர்மண்டிய கட்டிடத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவர் தலை முகம் நெற்றி , பிறப்புறுப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்ற அவ்வழியே சென்ற பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்த்திற்கு சென்ற போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் முகம் கை தலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் காயங்களுடன் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் இடது கையில் இதயம் (ஆர்ட்) படம் பச்சை குத்தப்பட்டு உள்ளது. ஏதாவது நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்ணா அல்லது கல்லூரி மாணவியா என்ற என்ற கோணத்திலும் , உள்ளாடைகள் இல்லாமல் நைட்டி மட்டுமே அணிந்துள்ளதால் சதுரங்கப்பட்டினம் கல்பாக்கம் போன்ற அருகே உள்ள பகுதியை சேர்ந்த பெண்ணாகவும் இருக்கலாம் என்ற கோணத்திலும் காதலருடன் வந்தாரா? கடத்தி வரப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சதுரங்கப்பட்டினம் கிராமங்களில் உள்ளவர்களிடம் புகைப்படத்தை காண்பித்து அடையாளம் கண்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட தடயங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். காவல் நிலையம் அருகேயே 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் போலீசார் இறந்த நிலையில்,

உள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்களிடம் அடையாளம் காண புகைப்படத்தை பகிரப்பட்டு வருகின்றனர். இறந்தவர் பற்றிய அடையாளம் கண்டறியப்பட்டால் சதுரங்கப்பட்டினம் காவல்நிலையத்தில் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாகவும், அல்லது அலைப்பேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளும்படி காவல்துறையினரின் அலைபேசி எண்ணும் பகிரப்பட்டு வருகிறது.

Views: - 0

0

0