மதுபானம் அருந்திவிட்டு ஏரியில் மீன் பிடிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு…

Author: Udayaraman
5 August 2021, 10:38 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மதுபானம் அருந்திவிட்டு ஏரியில் மீன் பிடிக்க சென்ற ஐந்து பேரில் நான்கு பேர் வீடு திரும்பிய நிலையில் ஒருவர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார்.

காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் (வயது 44) என்பவர் இன்று காலை தன்னுடைய நெருங்கிய உறவினர்களுடன் அங்குள்ள ஏரிக்கரைக்கு சென்று மது அருந்திவிட்டு தங்கள் வீட்டுக்கு தேவையான மீன்களைப் பிடிக்க ஐந்து பேரும் ஏரியில் இறங்கி உள்ளனர். அதில் ஹரிதாஸின் உறவினர்களான சாந்தகுமார், கமல்தாஸ், தோப்ளான், பூபால் ஆகிய 4 பேரும் மீன் பிடித்து விட்டு ஹரிதாஸ் இல்லாததால் அவர் மது போதையில் வீட்டுக்கு சென்று இருப்பார் என்று எண்ணி கரையில் இருந்த ஹரிதாசஸின் உடுப்பு மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டு தத்தம் வீடுகளுக்கு சென்றனர்.

இந்நிலையில் ஏரியில் ஒரு சடலம் மிதப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தாலுக்கா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல் துறையினர் ஏரியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதுபற்றி காவல்துறை தரப்பில் கூறும்போது, ஹரிதாஸ் மதுபோதையில் நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்றும், சந்தேகத்தின் பேரில் ஹரிதாசனின் உறவினரான சாந்தகுமார் என்பவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்யபடுகிறது என்றும் தெரிவித்தனர்.

Views: - 56

0

0