வாளங்குளத்தில் தவறி விழுந்த முதியவர் சடலமாக மீட்பு…

Author: Udhayakumar Raman
6 September 2021, 10:26 pm
Quick Share

கோவை: கோவை வாளங்குளத்தில் தவறி விழுந்த முதியவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள வாளாங்குளத்தின் பூங்கா கறையில் அமர்ந்திருந்த சுமார் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் திடிரென தவறி விழுந்ததாக தெரிகிறது. இரவு நேரம் என்பதால் வெளிச்சம் இல்லாத்தால், அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் உள்ளே இறங்கி தேடிய நிலையில், தவறி விழுந்த முதியவரை சடலமாக மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த பந்தைய சாலை போலிசார் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் என விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 117

0

0