அழுகிய நிலையில் மூதாட்டியின் சடலம் மீட்பு

24 August 2020, 9:31 pm
Quick Share

சென்னை: கொடுங்கையூரில் அழுகிய நிலையில் மூதாட்டியின் சடலத்தை மீட்டு காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 97 – வது தெருவில் வசித்து வருபவர்கள் பொன்னுமணி (80) ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி கோமளா என்கின்ற மலையாளத் தம்மாள். இவர்களுக்கு குழந்தைகள் உறவினர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது. வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 மாதமாகவே மூதாட்டி வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அவரது கணவர் மட்டும் வெளியில் கடைகளுக்குச் சென்று ஏதாவது வாங்கி சென்று வீட்டின் உள்ளே போவதை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர்.

மற்றபடி இருவரும் வீட்டிற்கு உள்ளே யாரையும் சேர்க்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்த தகவலின் பேரில் கொடுங்கையூர் போலீசார் வீட்டினுள் சென்று பார்த்த போது மூதாட்டி கோமளா இறந்து அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது உடலை கட்டி பிடித்தவாறு அவரது கணவர்  பொன்னுமணியும் அரை மயக்கத்தில் இருந்தார்.

பொன்னுமணி உயிரோடு இருப்பதை அறிந்த போலீசார் உடனடி யாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அக்கம் பக்கத்தினரிடம்  போலீசார் விசாரித்ததில் வயதான தம்பதியினர் 1991 ஆம் ஆண்டு இந்த வீட்டை வாங்கி கிரகப்பிரவேசம் செய்து குடியேறி உள்ளனர். அன்று முதல் இவர்களது வீட்டிற்கு உறவினர்கள் யாரும் வருவது கிடையாதாம்.

இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது. மேலும் அக்கம் பக்கத்தினர் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டார்களாம் தனியாகவே வசித்து வந்துள்ளனர். வயது மூப்பு காரணமாக மூதாட்டி உயிர் இழந்திருக்கலாம்  எனவும், அவரை பிரிய மனமில்லாமல் அவரது கணவரும் மனைவியின் சடலத்துடன்  கடந்த இரண்டு நாட்களாக படுத் துறங்கி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் அதிகமாக வரவே போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.