மழை நீர் வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை…

Author: Udhayakumar Raman
27 November 2021, 6:55 pm
Quick Share

மதுரை: மதுரையில் மழை நீர் வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை பசும்பொன் நகர் கோடி லயன் ரயில்வே தடுப்பு சுவர் அருகே சுமார் இரண்டுக்கு இரண்டு அடி கொண்ட வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் ஒன்று கிடந்துள்ளது. அப்பகுதியில் அதிக அளவு துர்நாற்றம் வீசவே அப்பகுதி மக்கள் விலங்குகள் ஏதேனும் இருக்கிறதா என பரிசோதனை செய்தபோது, அப்பொழுது அந்த வாய்க்கால் சுமார் 40 லிருந்து 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ந்துபோன, அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து மதுரை சுப்பிரமணியபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த சுப்பிரமணியபுரம் போலீசார் பிரேதத்தை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இறந்தது குறித்து மாடக்குளம் கிராம நிர்வாக அதிகாரி புகார் கொடுத்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சுப்பிரமணியபுரம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் இவர் எவ்வாறு இறந்தார் அல்லது குடிபோதையில் தவறி கீழே விழுந்தார் இவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 140

0

0