ரத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

15 October 2020, 11:37 pm
Quick Share

திருவள்ளூர்: பழவேற்காட்டில் கடற்கரையோரத்தில் ரத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் உடலை மீட்டு திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு லைட் ஹவுஸ் அரங்கம் குப்பம் அருகே கடற்கரையோர பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கழுத்து மற்றும் கை பகுதிகளில் ரத்த காயங்களுடன் உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி இருப்பதாக அங்கு உள்ள மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் திருப்பாலைவனம் காவல்துறையினர் உடலை மீட்டு,

பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர் யார் கடலில் குளிக்கும் போது உயிர் இழந்தாரா? அல்லது கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? வேறு எங்கேயேயும் இருந்த இவர் உடல் கடல் அலையில் அடித்து வரப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 30

0

0