முகம் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

15 November 2020, 6:24 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் ரயில் தண்டவாளத்தில் முகம் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குற்தது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகரில் அருப்புக்கோட்டை செல்லும் மேம்பாலம் அடியில் உள்ள இரும்பு பாதையில் முகம் சிதைந்த நிலையில் இருப்பதாக ரயில்வே ஊழியர் பார்த்து உள்ளார். இதை தொடர்ந்து அவர் ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்தான் பெயரில் அங்கு வந்த ரயில்வே காவல்துறையினர் கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் உடன் இணைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இறந்தவரின் முகம் சிதைக்கப்பட்டு இருப்பதால் அவர் 36 வயது மிக்க ஆண் என்பது மட்டுமே தெரிய வந்துள்ளது. இறந்தவர் யார் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டு ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 19

0

0