காயங்களுடன் அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு: உடலை கைப்பற்றி கொலையா? என விசாரணை

By: Udayaraman
7 October 2020, 4:40 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் அருகே காயங்களுடன் அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் அருகே வயதான முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல்துறையினர் தலையில் காயங்களுடன் அடையாளம் தெரியாமல் இறந்து கிடந்த 65 வயது முதியவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதியவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தானாக இறந்தாரா? என்ற பல்வேறு கோணத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நகராட்சி அலுவலகம் அருகே தலையில் காயங்களுடன் முதியவர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 48

0

0