திமுக கவுன்சிலரை போலீசார் தாக்கியதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்

4 February 2021, 5:22 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி அருகே உள்ள கோட்டகுப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திமுக கவுன்சிலரை போலீசார் தாக்கியதாக கூறி உறவினர்கள் மற்றும் கவுன்சிலர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது மயங்கி விழுந்த கவுன்சில் மற்றும் அவரது நண்பர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் பரபரப்பு.

புதுச்சேரி அருகே உள்ள கோட்டகுப்பம் பேரூராட்சியின் 16வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சரவணன். சரவணனுக்கு பிறந்தநாள் வருவதால் அவருடைய ஆதரவாளர்கள் கோட்டகுப்பம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சாலைகளில் பேனர் வைத்துள்ளனர். நெடுஞ்சாலைகளில் பேனர் வைப்பதற்கு தடை உள்ள நிலையில் அங்கு உள்ள பேனரை காவல்துறையினர் அகற்றி சென்றுள்ளனர். இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் குகன் ரங்கநாதன் தயாநிதி உள்ளிட்ட 5 பேர் கோட்டகுப்பம் காவல் நிலையத்திற்கு வந்து இது குறித்து கேட்டுள்ளனர். அப்போது அங்குள்ள காவலர்களுக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் அவர்களை அங்கேயே அமர வைத்து விசாரித்து பின்பு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சரவணன் உறவினர் மற்றும் திமுகவினர் கோட்டகுப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு கோட்டகுப்பம் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் சிலருக்கு திடீரென மயக்கம் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திமுக கவுன்சிலரை போலீசார் தாக்கியதாக கூறி கோட்டகுப்பம் காவல் நிலையம் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 0

0

0