ஆட்டோ ஓட்டுநரின் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்ட உறவினர்கள். சக நண்பர்கள் அடித்துக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு…

20 October 2020, 8:58 pm
Quick Share

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி புதுப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநரை சக நண்பர்கள் அடித்துக் கொலை செய்ததாக கூறி உறவினர்கள் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த  அக்ராகரம் வேடி வட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம் (40) என்பவர் நேற்று அக்ராகரம் பெருமாள் கோயில் அடிவாரத்திலுள்ள குளத்தில் விழுந்து விட்டதாக கூறி சுமார் ஆறு மணி நேரம் கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் ஆறுமுகத்தை சடலமாக மீட்டனர். அதன்பின் நாட்டறம்பள்ளி காவல்துறையினர் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்திருந்தனர். அவரது உடலை இன்று உடற்கூறு ஆய்வு முடித்த பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் ஆறுமுகத்தின் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி அவரது உறவினர்கள் புதுப்பேட்டை பகுதியில் திருப்பத்தூர் டூ நாட்டறம்பள்ளி செல்லும் சாலையில் ஆறுமுகத்தின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.‌

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சுமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆறுமுகத்தின் உறவினர்கள் ஆறுமுகம் இறப்பில் மர்மம் உள்ளதாகவும் அவரை அவரது சக நண்பர்கள் அடித்துதான் கொன்றுள்ளனர். எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆறுமுகம் இறப்பில் சந்தேகத்துக்குரிய நபர்களை கைது செய்யும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம் எனக்கூறி தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார் உங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

காவல்துறையில் அளித்த உறுதிமொழியை ஏற்று ஆறுமுகத்தின் உடலை எடுத்து கொண்டு சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின் ஆறுமுகத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக நாட்டறம்பள்ளி போலீசார் ஆட்டோ ஓட்டுநர்கள் 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்களோடு மது அருந்த சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள் சக ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்த நிலையில் உடலை சாலையில் வைத்து போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 14

0

0