கர்ப்பிணி பெண்ணிற்கு இறந்த நிலையில் பிறந்த குழந்தை: ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்…

29 August 2020, 9:18 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்ததால் மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என பெண்ணின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பேர்ணாம்பட் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் இவருக்கும் வடச்சேரி பகுதியை சேர்ந்த மோனிகா என்ற பெண்ணிற்க்கும் கடந்த ஆண்டு திருமணம் ஆன நிலையில், மோனிகா பிரசவத்திற்காக கடந்த வாரம் தனது தாய் வீட்டிற்கு வந்த நிலையில் நேற்று இரவு பிரசவ வலி அதிகமானதால் மேல்சாணங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று மதியம் 12.50 மணியளவில் மோனிகாவிற்கு இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனையறிந்த மோனிகாவின் உறவினர்கள் மருத்துவமனையில் பிரசவத்திற்கு உரிய மருத்துவர்கள் யாரும் இல்லாத காரணத்தினால் தான் குழந்தை இறந்துள்ளது என்று கூறி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுக்கையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் பெண்ணின் உறவினர்கள் சமதானமாக சென்றனர்.

இச்சம்பவம் குறித்து ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் கூறுகையில், நேற்று இரவு மோனிகா என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க பரிந்துரைந்தோம் ஆனால் பெண்ணின் உறவினர்கள் இங்கே பிரசவம் பார்க்கும்படி கேட்டுக்கொண்டதாலும் வலி அதிகமாக இருந்ததால் இங்கே பிரசவம் பார்க்கும் போது குழந்தை பிறக்கும் போதே இறந்த நிலையில் பிறந்ததாக தெரிவத்தனர்.

Views: - 0 View

0

0