பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி இணையதளத்தில் பாடல் வெளியீடு

19 November 2020, 9:09 pm
Quick Share

கோவை: பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி # RELEASE PERARIVALAN என்ற பாடலை கோவையிலிருந்து இணையதளம் வாயிலாக வெளியிட்டள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் பொதுமக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அதன் ஒரு புது வித போராட்டமாக பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தும் வகையில், # RELEASE PERARIVALAN என்ற பாடலை கோவையிலிருந்து இணையதளம் வாயிலாக வெளியிட்டுள்ளனர்.

கோவை வெங்கடாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஸ்டுடியோவில் இந்தப் பாடலானது வெளியிடப்பட்டது. இந்தப் பாடலின் வெளியீட்டில் திரையுலக பிரபலங்கள் மற்றும் பேரறிவாளன் தாயார் ஆகியோர் இணையதளத்தின் வாயிலாக நேரலையில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் பொழுது பேசிய பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தனது மகன் பேரறிவாளனை இம்முறையாவது விடுதலை செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மேலும் இந் நிகழ்வில் பேசிய திரையுலகப் பிரபலங்களான விஜய் சேதுபதி, சத்யராஜ், சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், பொன்வண்ணன், ரஞ்சித் உட்படப் பலரும் பேரறிவாளன் முறையாவது விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். பேரறிவாளனை விடுதலை தமிழக அரசு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.இந்த பாடலை நாளை இணையங்களின் வழியாக ட்ரெண்டிங்க் செய்யவும் முடிவெடுத்துள்ளனர்.

Views: - 28

0

0