கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட கிராமத்தில் நிவாரண உதவி : ஓட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் வழங்கல்

13 August 2020, 10:18 pm
Quick Share

தூத்துக்குடி: கொரோனா பாதிப்பால் தனிமைபடுத்தப்பட்ட கொல்லம்பரும்பு கிராமத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை ஒட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் சண்முகத்தாய் மேகலிங்கம் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொல்லம்பரும்பு ஊராட்சி கிராமத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஆறு பெண்கள் உட்பட ஏழு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.இதனையடுத்து அவர்கள் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அதனத்தொடர்ந்து கொல்லம்பரும்பு கிராமம் தனிமைபடுத்தப்பட்டது.

கிராமம் முழுவதும் தனிமைபடுத்தப்பட்டதால் பலர் வேலைக்கு வெளியே செல்ல முடியாத நிலைக்கு ஆளானர். இந்நிலையில் கொல்லம்பரும்பு கிராமத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட நிவாரன பொருட்களை ஒட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் சண்முகத்தாய் மேகலிங்கம் வழங்கினார். இந்நிகழ்வில், கொல்லம்பரும்பு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா, திமுக பிரமுகர் மேகலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 18

0

0