பழங்குடியினப்பெண் கர்ப்பப்பையில் இருந்த கட்டி நீக்கம்: சாதனை படைத்த அரசு மருத்துவர்கள்
Author: kavin kumar28 August 2021, 8:31 pm
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பழங்குடியினப்பெண் கர்ப்பப்பையில் இருந்த இரண்டு கிலோ எடையுள்ள கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமான நீக்கினர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தொம்பரம்பேடு பகுதியில் வசித்து வரும் பழங்குடியின இனத்தை சேர்ந்த லட்சுமி என்பவர் இவர் நீண்ட நாட்களாக வயிற்றில் கர்ப்பப்பையில் கட்டி வளர்ந்து அவதிப்பட்டுவந்தார், இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் அரசி தலைமையிலான மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ குழுவினர் ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையில் அவருக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவம் பார்த்து பின்னர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் அரசி தலைமையில் வைரமாலா, மணிலட்சுமி, உள்ளிட்ட மருத்துவர்கள் தலைமையில் இரண்டு மணி நேர அறுவை சிகிச்சை மூலம் 3 கிலோ கட்டியை அகற்றி சாதனை புரிந்துள்ளனர். தற்போது பழங்குடியின பெண் லட்சுமி மருத்துவமனையில் நலமுடன் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவ கல்லூரி டீன் அரசி தெரிவித்துள்ளார்.
0
0