கண்மாய் ஆக்கிரமிப்பு கடைகள் அகறறம்: பட்டா இடங்களையும் அகற்றிதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு…

13 July 2021, 1:28 pm
Quick Share

மதுரை: மதுரையில் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றிய போது, சில பட்டா இடங்களையும் அகற்றியதாக பொதுமக்களை குற்றச்சாட்டியுள்ளனர்.

மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்ற அளித்த உத்தரவையடுத்து பீபிகுளம் , முல்லைநகர் , மீனாட்சிபுரம், நேதாஜி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 581வீடுகளை ஆக்கிரமிப்பு என கூறிபொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதனடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான நோட்டிஸ் இந்த பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று இந்த வீடுகள், கடைகளுக்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இன்று முதற்கட்டமாக வணிககடைகளை இடிக்கும் பணி தொடங்கியது. இதில் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் தவிர பிற வணிக வளாக கட்டடங்கள் இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. சிலர் பட்டா நிலங்களை இடிப்பதாக குற்றஞ்சாட்டினர். அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது, பட்டா இடங்களை தவிர மற்ற அனைத்து இடங்களும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக இடிக்கப்படும் என தெரிவித்தனர்.

Views: - 109

0

0