பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கம்: அமைச்சர் காமராஜ் பேட்டி

7 September 2020, 8:44 pm
Quick Share

திருவாரூர்: பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத பயனாளிகளை கண்டறிந்து பட்டியலிலிருந்து பெயர்களை நீக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்ட 8 சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார். பின்னர் அதனைத் தொடர்ந்து ஆரூரான் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உறுப்பினர்கள் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-

சட்டம் ஒழுங்கு அதிமுக ஆட்சியில் தான் சிறப்பாக உள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது. சாதாரண மக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். திமுக ஆட்சிக்காலத்தை ஒப்பிடும்போது 200% அதிமுக ஆட்சியில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுகிறது. சட்டம் ஒழுங்கை சிறப்பாக செயல்படுத்துகிற அரசு அதிமுக அரசு மட்டும்தான். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லிக்கொண்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கு செயல்படவில்லை என அவர் கூறுவது தவறான கருத்து. பிரதமர் கிசான் திட்டத்தில் தாங்கள் தகுதியுடையவர்கள் என நேரடியாகவே அவர்களின் பெயர்களை பதிவு செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் மத்திய அரசு யாரெல்லாம் விவசாயிகள் அல்லாதவர்கள் என்கிற பட்டியலை அனுப்பி உள்ளதோ அவர்களைக் கண்டறிந்து பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது என்றார்.

Views: - 0

0

0