புதுச்சேரியில் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றம்

13 January 2021, 5:43 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்படுத்தும் வகையில் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த கடைகளை போலீசார் அகற்றினர்.

புதுவை புறநகர பகுதியான வில்லியனூர் மார்க்கெட் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாலைகளில் கடைகள் வைக்கப்பட்டதால் அப்பகுதி முழுவதும் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து இடையூர் ஏற்ப்பட்டது. இந்நிலையில் மேற்கு காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலிசார் சாலைகளில் வைத்திருந்த கடைகளை உடனடியாக அப்புறபடுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள திரையரங்கில் புதிய திரைப்படம் திரையிடப்பட்டதால் படம் பார்க்க வருபவர்கள் திரையரங்கு முன்பே சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதால் திரையரங்கு வாசலில் வாகனங்களை போக்குவரத்து இடையூராக நிறுத்தினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து ஒலி பெருக்கி முலம் பேசிய காவல் கண்காணிப்பாளர் கொரோனா பரவல் காரனமாக பண்டிகை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் என்பதால் சாலைகளில் கடைகள் வைத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்படுத்த கூடும் என்றும், இதனால் கூட்ட நெரிசல் ஏற்ப்பட்டு மிக ஏளிதில் கொரோனா பரவும் என்று தெரிவித்த அவர்,

கடைகளுக்கு வரும் பொது மக்கள் சமுக இடைவெளியை கடைப்பிடித்து, முககவசம் அனிய வேண்டும் என அறிவுறுத்தி, இதை மீறுபவர்களுக்கு அரசு அறிவித்தது போல் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார். பின்பு அங்கிருந்த கடைகளில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதை பொருடகள் ஏதேனும் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் போலிசார் சோதனை மேற்கொண்டனர்.

Views: - 7

0

0