மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்தில் சேதமடைந்த மண்டபத்தை தீர்மைப்பதற்கான பணி துவக்கம்

17 July 2021, 2:32 pm
Quick Share

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்தில் சேதமடைந்த வீர வசந்த ராயர் மண்டபத்தை தீர்மைப்பதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 2018- இல் நடந்த தீ விபத்தில் கோயிலின் ராஜகோபுரம் பகுதியில் உள்ள வீர வசந்தராய மண்டபம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து மண்டபத்தை சீரமைக்க ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டது. சென்னையில் இருந்து நிபுணர் குழுவினர் தீ விபத்தில் சேதமடைந்த மண்டபத்தை பார்வையிட்டு சீரமைப்பு தொடர்பாக ஆலோசனையும் அளித்தனர். இதைத்தொடர்ந்து நாமக்கல் பகுதியில் உள்ள குவாரியில் இருந்து கற்கள் வெட்டியெடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா தொற்று பொதுமுடக்கத்தால் கற்கள் கொண்டு வரும் பணி தாமதாகியது.

இதற்கிடையில் கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து பொதுப்போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு தளர்வுகள் அளித்துள்ள நிலையில் நாமக்கல்லில் இருந்து கற்தூண்களை மதுரைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி நாமக்கல்லில் இருந்து கனரக வாகனங்களில் கற்கள் ஏற்றப்பட்டு, மதுரை அவனியாபுரம் அருகே உள்ள செங்குளத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குச் சொந்தமான தோட்டத்தில் கற்கள் கொண்டு வரப்பட்டு தூண்கள் செதுக்கும் பணிகள் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக கோயில் அதிகாரிகள் கூறும்போது, வீர வசந்த ராய மண்டபத்தை சீரமைக்கும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக நாமக்கல் குவாரியில் இருந்து தூண்கள் அமைக்கும் கற்களை கொண்டு வரப்படுகிறது என்றனர்.

Views: - 108

0

0