திருச்சி கார் விபத்தில் நிருபர் பலி: போலீசார் விசாரணை

Author: kavin kumar
8 October 2021, 2:38 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே உள்ள மரத்தில் மோதியதில் தினமணி நிருபர் கோபி உயிரிழந்தார்.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திருச்சி மாவட்டம், சிறுகனுார் ராணே கம்பெனி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே உள்ள மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த திருச்சி தினமணி நிருபர் கோபி(37) மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த அவர்கள் நண்பர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சிறுகனுார் காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான நிருபர் கோபிக்கு சொந்த ஊர் திருச்செங்கோடு. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

Views: - 186

0

0