விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்க கோரிக்கை: சிவசேனா கட்சி சார்பில் விநாயகர் வேடமணிந்து வித்தியாசமான முறையில் மனு

Author: kavin kumar
23 August 2021, 2:57 pm
Quick Share

நீலகிரி: விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென உதகையில் சிவசேனா கட்சி சார்பில் விநாயகர் வேடமணிந்து வித்தியாசமான முறையில் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

எதிர்வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி நடைபெற உள்ளது கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனோ தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவில்லை. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறவும் விநாயகர் சிலைகள் செய்து கொண்டு கடந்த ஆண்டு முதல் அதனை பாதுகாத்துக் கொண்டிருக்கும் கைவினைத் தொழிலாளர்கள், பூஜை பொருட்கள் செய்யக்கூடியவர்கள், என லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதிய தளர்வுகளு டன் ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கொட்டும் மழையில் விநாயகர் வேடமணிந்து நீலகிரி மாவட்ட சிவசேனா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Views: - 151

0

0