எம்ஜிஆர் மார்க்கெட் உள்ளேயே புதிய மார்க்கெட்டை அமைத்து தருமாறு வேண்டுகோள்..!!

25 September 2020, 8:50 am
Quick Share

கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட் கொரோனா காலத்தில் நெருக்கடி காரணமாக தற்காலிகமாக மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கு வெங்காயம் தக்காளி ஆகியவை மாற்றப்பட்டது.

பிறகு அங்கிருந்த 300க்கும் மேற்பட்ட வியாபாரிகளிடம் தாங்கள் இந்த மார்க்கெட்டை காலி செய்து விட்டு புதிதாக மாநகராட்சியின் பழைய குப்பை கிடங்கு அருகே தங்களுக்கென ஒரு பகுதியை ஒதுக்கி தருகிறோம் அங்கு மாற்றிக் கொள்ளுங்கள் எனக் கூறினர். மார்க்கெட் வியாபாரிகளும் சரி அங்கு தார் சாலை அமைத்து லாரிகள் வாகனங்கள் சென்று வருமளவிற்கு அந்த பகுதியை விரிவுபடுத்தி தூய்மைப்படுத்தி புதிய செட் அமைத்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.

இதற்காக அமைச்சரிடமும் பலமுறை வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்று பேசினார். மாற்றித் தருவதாக உறுதியளித்தார். ஆனால் தற்பொழுது அங்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதே நேரத்தில் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்ட பின்பும் அந்த பேருந்து நிலையத்தில் வெங்காய லாரிகள் பங்காளி நாடுகளில் அங்கு வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் செல்வதில்லை சாலையிலேயே நிற்கிறது.

இதுகுறித்து மார்க்கெட் சங்கத்தின மீண்டும் எங்களுக்கு எம்ஜிஆர் மார்க்கெட் உள்ளேயே புதிய மார்க்கெட்டை அமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Views: - 8

0

0