லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வட்டார போக்குவரத்து ஆணையரிடம் கோரிக்கை

30 November 2020, 3:47 pm
Quick Share

திருவாரூர்: குறிப்பிட்ட நிறுவனங்களின் வாகன இருப்பிடம் கண்டறியும் ஜி.பி.எஸ் கருவிகளை மட்டுமே லாரி உரிமையாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற போக்குவரத்து ஆணைய ரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் “மன்னார்குடி தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் ” சார்பில் மன்னார்குடி வட்டார போக்குவரத்து ஆணையரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அந்த மனுவில், “கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் முதல் மூன்று மாதங்களில் சரக்குகளை ஏற்றிச் செல்ல போதிய வாய்ப்புகளும் இன்றி லாரி உரிமையாளர்கள் வாகனங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

தொழில் நிறுவனங்களும் தற்போது வரை தங்களது உற்பத்தியை முழுமையாக தொடங்காத நிலையிலும் லாரி உரிமையாளர்கள் காலாண்டு வரி ,வாகன காப்பீடு, ஆகியவற்றை அரசின் ஆணைக்கிணங்க வருவாய் இன்றி தவிக்கும் சூழலிலும் நிலுவை இன்றி செலுத்தி வருகிறது. கர்நாடகா ,ஒரிசா இமாச்சல பிரதேசம், போன்ற அண்டை மாநிலங்களில் காலாண்டு வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒளிரும் பட்டைகள் ஓட்டுவது வேகக்கட்டுப்பாட்டு கருவி எனும் வாகன இருப்பிடம் கண்டறியும் கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களின் கருவிகளை பொருத்த வேண்டும் என்ற நடைமுறை பிற மாநிலங்களில் இல்லை.

ஆனால் தமிழகத்தில் இத்தகைய சலுகைகள் இல்லாமல் புதிது புதிதாக பல்வேறு ஆணைகள் பிறப்பிக்கப் படுவதாகவும், டீசல் விலை உயர்வு சுங்கக்கட்டணம் மூன்றாம் நபர் காப்பீட்டு தொகை உயர்வு,போன்றவற்றால் ஓரிரு லாரிகளை வைத்து பிழைப்பு நடத்தும் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் தீர்ப்பின்படி ஏ.ஆர்.ஏ.ஐ , ஐ.சி.ஏ.டி அமைப்புகளின் அனுமதியை பெற்றுள்ள அனைத்து தயாரிப்பு நிறுவனங்களின் வேகக் கட்டுப்பாட்டு கருவியை பொருத்த உத்தரவிட்டுள்ளதை அமல் படுத்த வேண்டும்.

ஒளிரும் பட்டைகள் ஒட்டுவதற்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் ஜிபிஎஸ் எனப்படும் வாகன இருப்பிடம் கண்டறியும் கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களின் கழிவுகளை மட்டுமே பொருத்த வேண்டும் என்ற போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மன்னார்குடி தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.பி. இமய வீரன்,செயலாளர் எஸ்.தமிழரசன்,பொருளாளர் ஜி.சபரி கிரி நாதன்,மாங்குடியார் ரவி, மிலிட்டரி ராஜா, கோகுல் ரவி,மில் செந்தில் உள்ளிட்டோர் மனுக்களை வழங்கினர்.

Views: - 16

0

0