கொத்தடிமைகளாக இருந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 22 பேர் மீட்பு

20 November 2020, 6:26 pm
Quick Share

வேலூர்: பெங்களூரில் செங்கல் சூளை மற்றும் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு கொத்தடிமைகளாக இருந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 22 பேர் மீட்கப்பட்டனர்.

வேலூர்மாவட்டம், அணைகட்டு பகுதியை சேர்ந்த 12 பெரியவர்கள், 10 குழந்தைகள் என 22 பேர் கர்நாடக மாநிலம் அசான் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் தொழில், மற்றும் செங்கல் சூளை உள்ளிட்ட தொழில்கள் கொத்தடிமைகளாக இருப்பதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திர்க்கு கிடைத்த தகவலை அடுத்து அசான் மாவட்ட ஆட்சியரின் உதவியோடு 22 கொத்தடிமைகள் தற்போது மீட்கப்பட்டனர்.

இவர்கள் இடைதரகர் மூலம் முன்பணம் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு கொத்தடிமைகளாக இருந்தது விசாரணையில் வெளியானது. மீட்கப்பட்ட 22 கொத்தடிமைகள் வேலூர் அழைத்துவரப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கபட்டனர்.

Views: - 0

0

0