பிறந்த சில மணி நேரத்தில் சாக்கு பையில் வைத்து வீசப்பட்ட குழந்தை மீட்பு

23 February 2021, 11:32 am
Quick Share

திருச்சி: திருச்சியில் பிறந்த சில மணி நேரத்தில் சாக்கு பையில் வைத்து வீசப்பட்ட குழந்தையை போலீசார் மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

திருச்சி ஏர்போர்ட்  காவேரி நகர் பகுதியிலுள்ள காலிமனை பகுதியில் இன்று காலை அவ்வழியாக சென்ற பொது மக்கள் காதில் அப்பகுதியில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனடியாக இது குறித்து ஏர்போர்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஜெயக்குமார் சாக்கு பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு, அதைத் தொடர்ந்து அந்த சாக்கு பையையில் ஏழு மாத குறை பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை தொப்புள் கொடி அறுக்கப்பட்ட நிலையில்,

இருந்த குழந்தையை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். பின்பு முதலுதவி கொடுக்கப்பட்ட பிறகு அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து தவறான நடத்தையால் பிறந்த குழந்தை என்பதால் சாக்கு பையில் வைத்து போட்டு சென்றுள்ளனரா, அல்லது வேறு காரணம் உண்டா என்பது குறித்து
விசாரணை நடத்தி வருகின்றனர். 

Views: - 4

0

0