சைக்கிள் ஸ்டாண்டில் அனாதையாக விட்டு செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு:வீசிச் சென்றவர்கள் குறித்து விசாரணை

Author: kavin kumar
8 October 2021, 1:46 pm
Quick Share

தருமபுரி: அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் சைக்கிள் ஸ்டாண்டில் அனாதையாக விட்டு சென்ற பச்சிளம் குழந்தை மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் சைக்கிள் ஸ்டாண்ட் உள்ளது.அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பணி நிமித்தமாக வெளியுர் செல்லும் போது தங்களது இரு சக்கர வாகனங்களை இங்கு நிருத்திவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று மாலை சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை எடுக்கச் வந்த ஒருவர் துணியால் போர்த்தப்பட்ட நிலையில் அங்கு ஒரு பெண் பச்சிளம் குழந்தை இருப்பதை கண்டு அங்கிருந்த பைக் ஸ்டாண்டின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து பேருந்து நிலையத்தில் இருந்த காவலரிடம் தகவலளித்ததையடுது சம்பவ இடத்திற்க்கு வந்த காவலர் அந்த குழந்தையை குறித்து விசாரனை நடத்தினர். குழந்தை குறித்த விவரங்கள் யாருக்கு தெரியாததால் பின்பு இந்த பச்சிளம் குழந்தையை அரூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. மிகவும் பரபரப்பாக இருக்ககூடிய பகுதில் பச்சிளம் பெண் குழந்தை யாரோ ஒருவர் வைத்துவிட்டு சென்ற சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 196

0

0