அனைத்து ஜாதிகளுக்கும் உடனடியாக இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும்: லோக் தந்திரி ஜனதா தளம் மாநில தலைவர் வலியுறுத்தல்

7 February 2021, 2:11 pm
Quick Share

வேலூர்: ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி அனைத்து ஜாதிகளுக்கும் உடனடியாக இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என லோக் தந்திரி ஜனதா தளம் மாநில தலைவர் ராஜகோபால் வலியுறுத்தியுள்ளார்.

வேலூர் மாவட்டம்,வேலூரில் ராஷ்டிரிய லோக் தந்திரி ஜனதா தளம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் வழக்கறிஞர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தலைவர்கள் சண்முகம், தாமோதரன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் மாநில தலைவர் ராஜகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழக அரசு வேளாண்மை கடனை தள்ளுபடி செய்தது வரவேற்புகுரியது பாராட்டதக்கது. இதே போன்று தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்,

ஜல்லிக்கட்டு வழக்குகள் வாபஸ் பெற்றது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை பத்தாண்டுகளாக உயர்த்தியது போன்றவற்றிற்கு தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறோம். கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அதிகம் பதியப்பட்டாலும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யவில்லை. எனவே காவல்நிலையங்களில் குற்றப்புலனாய்வு தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும். போக்சோ வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் தனி நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும். விவசாய விளைநிலங்கள் பிளாட்போடுவதை தடுக்கவும்,

விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனை அரசு வழங்க வேண்டும், சின்னத்திரை தொடர்கள் மிகவும் ஆபாசமாக உள்ளது. அதற்கு தனி சென்சார் போர்டு அமைக்க வேண்டும், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமைய வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நன்மை கிடைக்கும் சசிகலா தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் அதில் நாங்கள் இடம் பெறமாட்டோம்.

அவர்களும் ஊழல்வாதிகள் தான் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். வன்னியர்கள் அவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீட்டை கேட்கவில்லை அவர்கள் எல்லா சமுதாயத்தினருக்கும் தான் இட ஒதுக்கீடு அளிக்க கோருகின்றனர். மாணவர்கள் வாங்கிய கல்வி கடனையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

Views: - 0

0

0