ஊரக வளர்ச்சி துறை சார்பில் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டம்

25 August 2020, 6:33 pm
Quick Share

ஈரோடு: கொரோனா பரவல் காலத்திலும் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை சார்பில் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் வளர்ச்சி துறையின் திட்ட பணிகள் கால அவகாசமின்றி முடிக்க நிர்பந்திக்க பண்படுத்தும் மற்றும் வளர்ச்சி துறை அனைத்து நிலை ஊழியர்களுக்கு காணொலி ஆய்வுகள் குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதை கண்டித்தும் கோவை மாவட்ட 4 ஊழியர்களின் பணி மாறுதல்களை உடனே ரத்து செய்ய வலியுறுத்தியும், இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் நிலை பதவி உயர்வு ஆணைகளை உடனை வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

Views: - 0

0

0