வேளாண் சட்டம் எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்: விவசாய சங்கத்தினர் வரவேற்பு

Author: kavin kumar
28 August 2021, 5:31 pm
Quick Share

திருச்சி: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டம் எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தற்கு விவசாய சங்கத்தினர் வரவேற்பு அளித்துள்ளனர்.

இன்று சட்டசபையில் மத்திய அரசு அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்வடிவு தீர்மானமத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிக்கு ஏற்றதாக இல்லை, இதனை எதிர்த்து கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு துறைக்கு மாநில அரசுடன் எந்த பேச்சுவார்த்தை நடத்தாமல் சட்டத்தைக் கொண்டு வந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது.

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்க வேண்டிய கடமை உள்ளது, எனவே மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பேசினார். இந்த தீர்மானத்தை எதிர்த்து அதிமுக, பாஜக ஆகிய கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்த போது பேசுகையில், தமிழக அரசு கொண்டு வந்த 3வேளாண் சட்டத்தை தீர்மானத்தை பிஜேபி, அதிமுக எதிர்ப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

Views: - 140

0

0