சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றம்

29 September 2020, 5:42 pm
Quick Share

ஈரோடு: சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட பொதுகுழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கார் வேன் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட பொதுகுழு கூட்டம் சோலாரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனா காலத்திற்கான வாகன வரியினை ரத்து செய்ய வேண்டும், ஓட்டுனர் உரிமம் பெற 8 ம் வகுப்பு சான்றிதழ் கேட்பதை கைவிட வேண்டும், சுற்றுலா வாகன இருக்கை அனுமதியை 20 + 1 என மாற்ற வேண்டும்,

சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவோரை கைது செய்ய வேண்டும், தங்கும் விடுதிகளில் ஓட்டுனர்களுக்கு ஓய்வறை வழங்க வேண்டும், வெளிமாநில வாகன விபத்துகளை ஒரே வாய்தாவில் முடிக்க வேண்டும், வாகன ஓட்டுனர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 9

0

0