ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மாற்றுத்திறனாளி மனைவியுடன் உண்ணாவிரதம்

25 January 2021, 2:10 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மாற்றுத்திறனாளி மனைவியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சித் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கோவிந்தராஜுலு. இவர் எம்ஜிஆர் மாவட்ட பொது ஊழியர்கள் கூட்டுறவு சிக்கன நிதி கடன் சங்கத்தின் நிர்வாகத்திலிருந்து தனக்கு சேர வேண்டிய பங்கு மூலதனம் சிக்கன நிதி மற்றும் வைப்புத் தொகை ரூபாய் இரண்டு லட்சத்திற்கு மேல் பைசல் செய்யாமல் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காரணங்களை கூறி தன்னை ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டி

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்தில் மாற்றுத்திறனாளி மனவியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டர். தனக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தன் குடும்பத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டர்.

Views: - 9

0

0