ஓய்வு பெற்ற மின் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு : 13 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.2 லட்சம் கொள்ளை

6 July 2021, 2:56 pm
Quick Share

ஈரோடு: மொடக்குறிச்சி அருகே ஓய்வு பெற்ற மின் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.2 லட்சம் கொள்ளை சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மொடக்குறிச்சி அருகே உள்ள சோலார், மணலிகந்தசாமி தெரு, கிரீன் பார்க் பகுதியில் வசித்து வருபவர் கணபதி ஓய்வு பெற்ற மின் ஊழியர். இவரது மனைவி ஜோதி, மகன் அருண் ஆதித்யா ஆகியோர் உள்ளனர். மகன் அருண் ஆதித்யா பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் பேப்பர் மில்லில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை கணபதி வெளியே சென்றுவிட்டார். மகன் அருண் ஆதித்யா வேலைக்கு சென்றுள்ளார். மனைவி ஜோதி காங்கயத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

நேற்று இரவு வேலை முடித்து வீட்டிற்கு வந்த மகன் அருண் ஆதித்யா வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 13 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.2 லட்சம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து கணபதி கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்த மொடக்குறிச்சி போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 181

0

0