கள் ஒரு தடை செய்ய வேண்டிய போதைப் பொருள் என நிரூபித்து விட்டால் பரிசு: நல்லசாமி அறிவிப்பு
20 January 2021, 3:24 pmதிருச்சி: கள் ஒரு தடை செய்ய வேண்டிய போதைப் பொருள் என நிரூபித்து விட்டால் 10 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி அறிவித்துள்ளார்.
திருச்சியில் விவசாயிகளை ஒருங்கிணைத்து செயலாற்ற FARMNET எனும் சமூக வலைதளத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி வெளியிட்டார். இதையடுத்து அவர் பேசியதாவது:- WWW.FARMNET.WORK என்ற இணையதளம் வாயிலாகவும், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் மொபைல் செயலிகள் மூலமாகவும் இந்த செயலியை பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதற்கும், இதன் மூலம் விவசாயிகளை ஒருங்கிணைப்பதற்கும் ‘வேளாண் மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளையும், விவசாய சங்கங்களையும்,
இதன் மூலம் ஒருங்கிணைத்து வேளாண் சார்ந்த திட்டங்களுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2021 தேர்தலை முன்னிறுத்தி வருகிற 21-ஆம் தேதி ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, லாங்ஸ் கார்டன் சாலை வரை அசுவமேத யாகம் நடத்தப்படும், அரசு தரப்போ, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தரப்போ, யாக குதிரையை தடுத்து நிறுத்தி வாதிட்டு, கள் ஒரு தடை செய்ய வேண்டிய போதைப் பொருள் என நிரூபித்து விட்டால் 10 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0
0