வாரிசு சான்று வழங்க லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது

10 November 2020, 10:23 pm
Quick Share

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் வாரிசு சான்று வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமியை ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் எலந்தககாடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி முத்துசாமி . இவரது தந்தை அர்த்தநாரிக்கவுண்டர் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் வாரிசு சான்று வழங்க கோரி சிறுவலூர் கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமியிடம் ஓர் ஆண்டிற்கு முன்பு விண்ணப்பித்து இருந்தார். வாரிசு சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமி முதலில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து மீண்டும் 10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என முத்துசாமியை நிர்பந்த படுத்தியதுடன் மன உலைச்சலுக்கு ஆளாகிக்கியுள்ளார். இதனை தொடர்ந்து முத்துசாமி மீண்டும் லங்சம் தருவதாக ஒப்புக்கொண்டு கோபிசெட்டிபாளையத்தில் செயல்படும் லஞ்ச ஒழிப்பு மக்கள் இயக்கத்தை நாடியுள்ளார்.

அவர்களது வழிகாட்டுதலின் படி கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமிக்கு 5 ஆயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டு, இதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் முத்துசாமியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் இரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கி உள்ளனர். அந்த பணத்தை முத்துசாமி கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமியிடம் வழங்கிய போது அங்கு மறைந்து இருந்த ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் திவ்யா மற்றும் இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 19

0

0