நாளுக்கு நாள் அதிகாரிக்கும் கொரோனா பலி… ஒரே நாளில் 7 பேர் பலி…

5 August 2020, 3:31 pm
Corona_Vaccine_Serum_Institute_UpdateNews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 286 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. இந்தியாவிலும் தொற்று புகுந்து அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை மாநிலத்தில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 286 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதேபோல் ஒரே நாளில் 7பேர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் புதுச்சேரியில் 182 நபர்களுக்கும், காரைக்காலில் 21 நபர்களுக்கும், ஏனாம் பிராந்தியத்தில் 80, மாஹேவில் 3 நபர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 4,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,721 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,646 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் 4 பேரும், ஏனாத்தில் 3 பேரும் என ஒரே நாளில் 7பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் அதிகப்படியான நபர்கள் உறுதி செய்யப்பட்டதும், உயிரிழப்பு இன்றே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0