அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல்: அதிமுகவினர் கைது

Author: Udhayakumar Raman
31 August 2021, 3:15 pm
Quick Share

திண்டுக்கல்: ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

இன்று தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலையார் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கைதை கண்டித்து
திண்டுக்கல் கல்லறைதோட்டத்தில் அதிமுக நகர கழகம் மற்றும் ஒன்றியம் சார்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் எம்எல்ஏ சென்னம்பட்டி பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் ராஜசேகர், அபிராமி கூட்டுறவு சங்கத் தலைவர் பாரதி முருகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமறவன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது தனியார் திருமண மகாலில் அடைத்தனர்.

Views: - 94

0

0