தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

Author: kavin kumar
18 August 2021, 4:28 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் காமராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மேலந்தல் கிராமத்தில் கடந்த மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற திருட்டு வழக்கில் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த வடகரை தாழனூர் பகுதியைச் சேர்ந்த காசிநாதன் மகன் காமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பல்வேறு வழக்குகளில் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம், கார்கள், பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் காமராஜ் தொடர்ந்து பல ஆண்டுகளாக கொள்ளையில் ஈடுபட்டு வந்தது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காமராஜ் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாவட்ட எஸ்பி ஜியாவுள் ஹக் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அவர்களிடம் பரிந்துரை செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து காமராஜ் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 174

0

0