சிவ சுப்ரமணியசுவாமி கோவிலில் பூட்டை உடைத்து திருட்டு: நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை

Author: kavin kumar
6 October 2021, 4:29 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை. காவல் துறையினர் விசாரணை.

தருமபுரி அன்னசாகரம் குடியிருப்பு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவசிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. வழக்கம் போல தினசரி பூஜை முடித்த பின்னர் நேற்று இரவு கோவிலை பூட்டிவிட்டு அர்சகர் வீட்டிற்கு சென்று விட்டார். வழக்கம் போல இன்று காலை பூஜைக்காக கோவிலை திறந்து பார்த்த போது கோவிலின் உள்பிரகாரத்தில் பொருட்கள் சிதறிக்கிடந்ததும், உண்டியல் உடைக்கபட்டு அங்கிருந்த பீரோக்களும் உடைக்கபட்டதை கண்டு அதிர்சியடைந்த அவர், கோவில் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்ததையடுத்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தின் பேரில் தருமபுரி நகர காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை மற்றும் நகர காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டனர்.

இதனையடுத்து அறநிலையத்துறையினர் உதவியுடன் கோவிலில் இருந்த தங்கம், வெள்ளி, பூஜை பொருட்கள் நகைகள் ஆகியவை எத்தனை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் கைரேகை பதிவுகளை நகல் எடுக்கம்பணி செய்து வருகின்றனர். கோவில் கண்காணிப்பு கேமராவால் கொள்ளையர்கள் சிக்கிவிடாமல் இருக்க அங்கிருந்த ஹார்ட் டிஸ்கை தண்ணீரில் மூழ்கடித்தால் கேமரா பதிவுகளை ஆய்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனை பழுது நீக்கும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து தருமபுரி காவல் துறையினர் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 210

0

0